பெண்ணின் சம்மதம்.
இறை நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களை (அவர்கள் மனப்பொருத்தம் இல்லாத நிலையில்)நீங்கள் பலவந்தப்படுத்தி அனந்தரமாகக் கொள்வது உங்களுக்குக் கூடாது.(அல்குர்ஆன் 4:19)விதவை, விவாக முறிவுப் பெற்ற பெண்களை அவர்களது முழு சம்மதமின்றி திருமணம் செய்து வைக்காதீர்கள்,ரூ கன்னிப் பெண்களிடம் திருமணம் விஷயமாக அனுமதி பெற வேண்டும் என்று நபி(ஸல்) கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஒரு கன்னிப்பெண் (நாணத்தால் தன் எண்ணத்தைக்) தெளிவாகக் கூற வெட்கப்படுவாளே! என கேட்கப்பட்டது அதற்கு நபி 'அவளது மௌனமே சம்மதமாகும்' என்றார்கள்.(ஆயிஷா, இப்னு அப்பாஸ், அபூஹூரைரா (ரலி அன்ஹூம்), புகாரி,முஸ்லிம்திருமணத்திற்கு பெண்களின் முழு மன சம்மதம் பெறுவது அவசியமாகும்.
மஹர் (அன்பளிப்பான மணக்கொடை)
நீங்கள் (மணம் புரியும்) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை) மகிழ்வோடுகொடுத்துவிடுங்கள். அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்குக் கொடுத்தால் அதை தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள். (அல்குர்ஆன் 4:4)
மணம் முடிக்கும் மணப்பெண்ணுக்குரிய (மஹர்) தொகையை முறைப்படி கொடுத்து விடுங்கள்(அல்குர்ஆன் 4:24,25)
மணம் முடிக்கும் பெண்ணுக்கு ஒரு பொற்குவியலையே (மஹராக) கொடுத்த போதிலும், அதிலிருந்துஎதனையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள்.(அல்குர்ஆன் 4:20) திருமண விருந்து.
திருமணத்தின் போது பெண் வீட்டாருக்கென்று தனிப்பட்ட முறையில் எத்தகைய செலவும் இல்லை. செலவென்று வரும் அனைத்தும் மணமகனையே சாரும். அந்த வகையில் மணமகன் திருமண விருந்துக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.நபி (ஸல்) அவர்கள் கொடுத்த வலீமா விருந்துகளில் ஜைனப் (ரலி) அவர்களை மணமுடித்த பின் கொடுத்தது போன்ற சிறப்பானதை நான் பார்க்கவில்லை. அதற்கென நபி(ஸல்) அவர்கள் ஒரு ஆடு அறுத்து விருந்தளித்தார்கள். அந்த விருந்தில் ரொட்டியும், இறைச்சியும் வழங்கப்பட்டது. அனஸ்பின் மாலிக் (ரலி) புகாரி, முஸ்லிம்நபி(ஸல்) தாம் செய்த அனைத்து திருமணத்திற்கும் விருந்தளித்துள்ளார்கள். அவற்றில் பெரிய விருந்து ஜைனப்(ரலி)யை திருமணம் செய்யும் போது கொடுத்ததுதான். வேறெந்த திருமணத்திற்கும் ஆடு அறுத்து விருந்து வைக்கவில்லை.
நபி (ஸல்) அவர்களின் திருமணங்களில் ஒரு சிலவற்றிக்கு இரு முத்துக்கள் அளவுள்ள பார்லியில்தயாரிக்கப்பட்டதை வலீமா விருந்தாக கொடுத்தார்கள். (1 முத்து 750 கிராம் ஆகும்)ஃபிய்யா பின்து ஷைபா (ரலி) புகாரி, முஸ்லிம்) விருந்து வழங்கும் போது கவனிக்க வேண்டியவை.நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:நீங்கள் வலீமா விருந்துக்கு அழைக்கப்பட்டால், அவ்வழைப்பை ஏற்றுச் சிறப்பளியுங்கள். இப்னு உமர்(ரலி)ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.எந்த விருந்துக்கு செல்வந்தர்கள் அழைக்கப்பட்டு, ஏழைகள் மறுக்கப்படுகிறார்களோ அவர்அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்தவராவர்.அபூஹூரைரா, இப்னு அப்பாஸ் (ரலி-அன்ஹூம்) புகாரி, முஸ்லிம்(இன்றைய திருமணங்களில் இந்த ஹதீஸில் வரும் எச்சரிக்கையை
யாரும் கண்டுக் கொள்வதேயில்லை என்ற மோசமான நிலையே நீடிக்கிறது) திருமண வாழ்த்து.
'பாரகல்லாஹுலக வ பாரக அலைக்க வஜமஅ பைனகுமா ஃபி கைர்' அல்லாஹ் உங்களுக்கு உள்ளும் புறமும் அருள் புரிந்து நல்லக் காரியங்களில் உங்கள் இருவரையும் ஒன்றிணைத்து வைப்பானாக...(என்பது நபிவழி துஆ) அபூஹூரைரா (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் அஹ்மத், அபூதாவூத், திர்மிதி,இப்னுமாஜா, ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.
இவை அனைத்திலும் தவறு இருப்பின் மன்னிக்கவும்...